தலைநகர் டெல்லியில் மின் தேவை 4906 மெகாவாட்டாக SLDC தரவுகளின் படி பதிவாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பதிவாகியுள்ள இந்த அளவு, கடந்த 2 வருடத்தில் பதிவான மின் தேவைகளின் அளவைவிட உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட டிசம்பர் மாதத்தில் 4723 மெகாவாட், முந்தைய ஆண்டு டிசம்பரில் 4671 மெகாவாட் என்ற அளவில் டில்லியன் மின் தேவை பதிவானது. மேலும், இந்த வருட குளிர் காலத்தில் டெல்லி நகரின் மின் தேவை 5500 மெகாவாட் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியின் மின் தேவை அனல் மின் நிலையம் மட்டுமல்லாது, சூரிய எரிசக்தி, காற்றாலை மற்றும் நீர்மின் நிலையங்கள் மூலமாகவும் கணிசமான அளவில் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், மின் தேவையை பொறுத்து மின் உற்பத்தியை கணக்கிட்டு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.