பங்கு பரிவர்த்தனை எதிரொலி - டெல்ஹிவெரி பங்குகள் 3.7% வீழ்ச்சி

November 17, 2023

தளவாடத் துறையில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள டெல்ஹிவெரி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 3.7% வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், டெல்ஹிவெரி நிறுவனத்தின் பங்கு விலை 398.5 ரூபாயாக இருந்தது. டெல்ஹிவெரி பங்கு மதிப்பு இத்தகைய வீழ்ச்சியை சந்தித்ததற்கு, இன்று நடைபெற்ற பங்கு பரிவர்த்தனையே காரணம் என கூறப்படுகிறது. சுமார் 17457113 பங்குகளை பிளாக் டீல் மூலம் டெல்ஹிவெரி நிறுவனம் விற்றது. இவற்றின் மொத்த மதிப்பு 722.18 கோடி அளவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த […]

தளவாடத் துறையில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள டெல்ஹிவெரி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 3.7% வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், டெல்ஹிவெரி நிறுவனத்தின் பங்கு விலை 398.5 ரூபாயாக இருந்தது. டெல்ஹிவெரி பங்கு மதிப்பு இத்தகைய வீழ்ச்சியை சந்தித்ததற்கு, இன்று நடைபெற்ற பங்கு பரிவர்த்தனையே காரணம் என கூறப்படுகிறது. சுமார் 17457113 பங்குகளை பிளாக் டீல் மூலம் டெல்ஹிவெரி நிறுவனம் விற்றது. இவற்றின் மொத்த மதிப்பு 722.18 கோடி அளவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பங்குகளை விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதுவரையில், ஜப்பானின் சாஃப்ட் பேங்க் குழுமம் 4% பங்குகளை விற்றதாக மட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu