இந்திய அரசின் இணைய வர்த்தக தளமான ஓஎன்டிசியில் தளவாட சேவைகளை தொடங்கியுள்ளதாக. டெல்ஹிவெரி (Delhivery) நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 18000 க்கும் மேலான பின்கோடு முகவரிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல உள்ளதாக கூறியுள்ளது. ஏற்கனவே, ஓஎன்டிசியில் ஷிப்ரோகெட், லோடுஷேர், இ கார்ட், டன்சோ ஆகிய நிறுவனங்கள் தளவாட சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஓஎன்டிசியில் இணைந்தது குறித்து டெல்ஹிவெரி நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி கபில் பாரதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியர்களின் இணைய வர்த்தக முறையில் ஓஎன்டிசி முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று கூறியுள்ளார். ஓஎன்டிசியின் தலைமை செயல் அதிகாரி கோஷி, ஓஎன்டிசியில் டெல்ஹிவெரி இணைந்துள்ளதால், தளத்தின் வலிமை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். குருகுராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெல்ஹிவெரி நிறுவனத்தின் வருவாய் கடந்த காலாண்டில் 19% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.














