பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதசே நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
காசா பகுதியில் நடைபெறும் தாக்குதல் குறித்த தகவல்களை ஊடகவியலாளர்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர் என்று அமெரிக்காவில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. இதில் ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கான ஆதாரம் உள்ளது என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.