தமிழகம் முழுவதும் வருமானவரித்துறை அலுவலகங்கள் முன்பு 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருப்பதாக கே. எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி பாஜக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு லஞ்ச பணம் பெறுவதற்கு பதிலாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் ரூபாய் 6572 கோடியை நன்கொடையாக பாஜக அரசு பெற்றது. இது மொத்த நன்கொடையில் 50 சதவீதம் ஆகும். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் மோடி அரசு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தையும் முடக்கியதை எதிர்த்து அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் வருமான வரித்துறை அலுவலகங்களில் வருகிற 19 ஆம் தேதி காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உறுப்பினர்கள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.