வியட்நாமில் டெங்கு நோயால் 1 லட்சம் பேர் பாதிப்பு

October 19, 2023

வியட்நாமில் டெங்கு நோயால் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வியட்னாமில் டெங்கு நோய் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. ஒரு வாரத்திற்கு 3000 பேர் பாதிப்பு என அங்கு பதிவாகி இருந்தது. இப்போது இரு மடங்காக பாதிப்பு எண்ணிக்கை உயர ஆரம்பித்துள்ளது. தற்போது டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. தலைநகரான ஹனோயில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இருந்ததைவிட இது மூன்று […]

வியட்நாமில் டெங்கு நோயால் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியட்னாமில் டெங்கு நோய் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. ஒரு வாரத்திற்கு 3000 பேர் பாதிப்பு என அங்கு பதிவாகி இருந்தது. இப்போது இரு மடங்காக பாதிப்பு எண்ணிக்கை உயர ஆரம்பித்துள்ளது. தற்போது டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. தலைநகரான ஹனோயில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இருந்ததைவிட இது மூன்று மடங்கு அதிகம் என்று சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர். மேலும் ஹோங்கு மாய், தான் ட்ரை, டார்ச் தட், ஹோ டோங் ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங் வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெங்கு காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu