தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஒரு மாதத்தில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்தக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து ஜூன் 16-ம் தேதி அனுமதிக்கப்பட்டவர்களில் 454 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 47 பேருக்கும், ஜூலை மாத பரிசோதனையில் 51 பேருக்கும், ஆகஸ்ட் மாத பரிசோதனையில் இதில் 53 பேருக்கு மட்டுமே டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.