தமிழகத்தில் இதுவரை 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் 4 வயதை சேர்ந்த சிறுவன் டெங்கு காய்ச்சலால் பலி ஆனதை தொடர்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிர படுத்தி உள்ளது.
இதில் தற்போது கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், ஆகிய மாவட்டங்களில் இதுவரை 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ளவர்கள் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுக்கும் பணியை சுகாதார துறையினர் செய்து வருகின்றனர். மேலும் மதுரையில் ஏராளமான காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. மாவட்டங்கள் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.