குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்திகள் பங்கேற்பதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழ்நாடு அதில் இடம்பெறவில்லை. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கோவா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அலங்கார ஊர்தி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4வது ஆண்டாக, டெல்லி மாநிலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இது ஒரு தாக்குதலாகவும், பாஜகவின் பழிவாங்கும் செயல் என அம்மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.