ரஷ்யாவில் இருந்து கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கடலுக்கடியில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது நார்ட் ஸ்ட்ரீம் என அழைக்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு, உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய சில வாரங்களில், இந்த குழாயில் பயங்கர வெடி விபத்து நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்த சதி செயலில் அமெரிக்காவுக்கு பங்குள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்த விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் நாடு, நார்ட் ஸ்ட்ரீம் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. “மிகவும் சிக்கலான இந்த வழக்கில் பரஸ்பர குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், சதி செயலை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, விசாரணையை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்” என டென்மார்க் கூறியுள்ளது.