சீனா செர்பியா இடையே வளர்ச்சிக்கான ஒப்பந்தம்

May 9, 2024

சீனாவுக்கும் செர்பியாவுக்கும் இடையே எதிர்கால வளர்ச்சிக்கான ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தானது. சீன அதிபர் ஜிங்பின் செர்பியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் மிலோஸ் வுசெவிக்கை சந்தித்து பேசினார். அதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களின் அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்த சந்திப்பின்போது பரஸ்பர எதிர்கால வளர்ச்சிக்கான இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவுடன் ஐரோப்பிய நாடு இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். […]

சீனாவுக்கும் செர்பியாவுக்கும் இடையே எதிர்கால வளர்ச்சிக்கான ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தானது.

சீன அதிபர் ஜிங்பின் செர்பியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் மிலோஸ் வுசெவிக்கை சந்தித்து பேசினார். அதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களின் அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்த சந்திப்பின்போது பரஸ்பர எதிர்கால வளர்ச்சிக்கான இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவுடன் ஐரோப்பிய நாடு இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

உக்ரைன் போரில் ஐரோப்பா உக்ரைனுக்கு ஆதரவாகவும், சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகும் செயல்படும் இந்த சூழலில் இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு பார்க்கும் என்பது குறித்து வரும் நாட்களில் தெரியவரும். உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பிய யூனியனில் இணைய செர்பியா உள்ளிட்ட ஆறு பால்கன் நாடுகள் விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu