சென்னை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் செயல்பாடுக்கு வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 3.66 கிலோமீட்டர் நீளமான முதல் ஓடுபாதையும், 2.89 கிலோமீட்டர் நீளமான இரண்டாவது ஓடுபாதையுமே செயல்படுகின்றன. முதல் ஓடுபாதை பெரிய ரக விமானங்களுக்கு, இரண்டாவது ஓடுபாதை சிறிய ரக விமானங்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. முதலில் "பி" டாக்சி வே செயல்திறனில் பிரச்சினை ஏற்பட்டது, தற்போது அதை நேராக்கியுள்ளதால், இரண்டு ஓடுபாதைகளும் முழுமையாக செயல்படுகின்றன. இது, விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், ஏப்ரல் மாதத்தில் 615 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் 952 ஆக அதிகரித்துள்ளது. இது, விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் எண்ணிக்கைகளை மேலும் உயர்த்தும்.