திருப்பதியில் இனி பக்தர்கள் காத்திருக்க தேவையில்லை: தேவஸ்தானம் அறிவிப்பு

November 2, 2022

திருப்பதியில் இனி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்க தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது. தற்போது பக்தர்களின் வசதிக்காக, மீண்டும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கனை […]

திருப்பதியில் இனி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்க தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது. தற்போது பக்தர்களின் வசதிக்காக, மீண்டும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கனை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அதன்படி நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் நாள்தோறும் பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறையை திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கி உள்ளது. இந்த டோக்கன்கள் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்- 2 ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தலா 25,000 டோக்கன்களும், வாரத்தின் மற்ற நாட்களில் தலா 15,000 டோக்கன்களும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் நேரடியாக திருப்பதி மலைக்கு சென்றும் வழிபடலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒரு முறை ஆதார் அட்டையை சமர்ப்பித்து டோக்கன் பெரும் பக்தர்கள் மீண்டும் 30 நாட்களுக்கு பிறகு மட்டுமே, இந்த வசதியை பெற முடியும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இலவச டோக்கன்கள் பெற்றுக்கொண்ட பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு சென்றால் ஒன்று முதல் 2 மணி நேரங்களில் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu