ஏர் ஏசியாவுக்கு 20 லட்சம் அபராதம் - டிஜிசிஏ

February 11, 2023

விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததன் காரணமாக, ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு தேசிய விமான போக்குவரத்து அமைப்பான டிஜிசிஏ, 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், ஏர் ஏசியாவின் பயிற்சி துறை தலைவரை மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. அத்துடன், பயிற்சி வழங்கும் துறையில், குறிப்பிட்ட 8 பேருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள், தங்கள் பணி நேரத்தில் பணியை சரிவர மேற்கொள்ளவில்லை என்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் […]

விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததன் காரணமாக, ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு தேசிய விமான போக்குவரத்து அமைப்பான டிஜிசிஏ, 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், ஏர் ஏசியாவின் பயிற்சி துறை தலைவரை மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. அத்துடன், பயிற்சி வழங்கும் துறையில், குறிப்பிட்ட 8 பேருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள், தங்கள் பணி நேரத்தில் பணியை சரிவர மேற்கொள்ளவில்லை என்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதத்தில், ஏர் ஏசியா விமான நிறுவனத்தில்,டிஜிசிஏ கண்காணிப்பு மற்றும் ஆய்வு மேற்கொண்டது. அதன் பின்னர், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய டிஜிசிஏ உயர் அதிகாரிகள், இந்த கள ஆய்வின் போது விமானிகள் சிலர் முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று தெரிவிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக, துறை தலைவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu