வீட்டிலிருந்தபடியே பருத்தி விற்பனை - மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் சாதித்த தர்மபுரி விவசாயி

February 16, 2023

மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம், தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற விவசாயி, வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் பருத்தி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். அரூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, தன்னிடம் இருக்கும் பருத்தி குறித்து தனபாக்கியம் தகவல் அனுப்பியுள்ளார். அதன் பெயரில், ஆய்வாளர் நேரில் சென்று பருத்தியின் தரத்தை ஆய்வு செய்து, அது குறித்த தகவல்களை இணையத்தில் பதிவு […]

மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம், தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற விவசாயி, வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் பருத்தி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார்.

அரூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, தன்னிடம் இருக்கும் பருத்தி குறித்து தனபாக்கியம் தகவல் அனுப்பியுள்ளார். அதன் பெயரில், ஆய்வாளர் நேரில் சென்று பருத்தியின் தரத்தை ஆய்வு செய்து, அது குறித்த தகவல்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். அவரது பருத்திக்கு, செல்போன் மூலம் பல வியாபாரிகள் விலையை குறிப்பிட்டு பதிவேற்றினர். அதிகபட்சமாக, குவிண்டாலுக்கு 7700 ரூபாய் பதிவிட்ட வியாபாரியிடம் பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு, நேற்று, முதல் முறையாக, வீட்டில் இருந்தபடியே, 3 குவின்டால் பருத்தியை தனபாக்கியம் விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், போக்குவரத்து செலவின்றி, வீட்டில் இருந்தபடியே, விளைபொருளை விற்பனை செய்யும் இந்த திட்டம், உண்மையிலேயே விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டம்தான்" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu