ஏர்டெல் நிறுவனத்தின் இலங்கை வர்த்தக பிரிவு ஏர்டெல் லங்கா என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் 100% பங்குகளை இலங்கையின் பிரபல தொலைத்தொடர்பு வர்த்தக நிறுவனமான டயலொக் அக்சியட்டா கையகப்படுத்தி உள்ளது.
ஏர்டெல் லங்கா மற்றும் டயலொக் அக்சியட்டா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நிறைவடைந்தது. முன்னதாக, இதற்கான ஒப்புதல் கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்தது. தற்போதைய நிலவரப்படி, ஏர்டெல் லங்கா நிறுவனத்தின் 100% பங்குகளை டயலொக் அக்சியட்டா கொண்டுள்ளது. அதே சமயத்தில், டயலொக் அக்சியட்டா நிறுவனத்தின் 10.355% பங்குகளை ஏர்டெல் கொண்டுள்ளது. இனிமேல் இலங்கையைப் பொறுத்தவரை 21 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் டயலொக் அக்சியட்டா முதன்மை தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக இருக்கும்.