பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.267 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், உலக வங்கி, அன்னிய செலாவணி நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருந்து கடன்களை பெற்று நிலைமையை சமாளிக்கிறது. அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1, டீசல் ரூ.7 என உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால், பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகும். இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.