திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்க வரிசையில் நிற்கும் சிரமத்தை தவிர்க்க, டிஜிட்டல் முறையில் லட்டு பெறும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு நேரம் மிச்சமாகும்.
இனிமேல், பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண்ணை எந்திரத்தில் பதிவு செய்து, தேவையான லட்டுகளுக்கான தொகையை யூ.பி.ஐ. போன்ற டிஜிட்டல் முறையில் செலுத்தி டிக்கெட்டை பெறலாம். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களும் ஆதார் எண்ணை பயன்படுத்தி 2 லட்டுகள் வாங்கலாம்; எதிர்காலத்தில் இந்த வரம்பு 4 ஆக உயர்க்கப்படும். யூனியன் வங்கி, கனரா வங்கி, எம்.பி.சி. மையம், பத்மாவதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் இந்த எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. விரைவில் VIP டிக்கெட்டுகளும் இதே முறை மூலம் பெறும் வசதி உருவாக்கப்படுகிறது.














