இன்றைய தினம், மக்களவையில் டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா, டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்தார். இது, தனி நபர் தனி உரிமைக்கான அடிப்படை விதிகளை மீறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன. மேலும், ஆழமான ஆய்வுகள் மற்றும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதே வேளையில், அவர்கள் கருத்துக்கு மாறாக, தனிநபர் பாதுகாப்பை இந்த மசோதா நிச்சயம் உறுதி செய்யும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார்.