6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களை அழித்த பெரும் அழிவிற்கு காரணமான விண்கல்லின் தோற்றம் குறித்த புதிய தகவல்களை ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளது. கோலோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி வேதியியலாளர் மரியோ பிஷர்-கோட் நடத்திய இந்த ஆய்வில், அந்த விண்கல் வியாழனின் சுற்றுப்பாதையை தாண்டிய பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்றும், முன்னதாக கருதப்பட்ட வால் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மெக்ஸிகோவில் உள்ள சிச்சுலுப் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் உள்ள ரூத்தீனியம் ஐசோடோப்புகளை பகுப்பாய்வு செய்யும் புதிய நுட்பங்களை பயன்படுத்தி, அந்த விண்கல் அரிதான சி-வகை விண்கல் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு விண்கல் அச்சுறுத்தல்கள் மற்றும் பூமியின் நீர் தோற்றம் குறித்த புரிதலை மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது.