நாளை முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது.
உத்திரபிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு கடந்த 22ஆம் தேதி வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதனை அடுத்து 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து அயோத்திக்கு நாளை முதல் நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது. இதற்காக விமான டிக்கெட் முன்பதிவு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்த விமான சேவை கட்டணம் ரூபாய் 6,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பகல் 12:40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.15 க்கு அயோத்தி சென்றடையும். மீண்டும் அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மாலை 6:20க்கு சென்னை வந்தடைகிறது. இதே போல் மும்பை, பெங்களூர், அகமதாபாத் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.