செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கரூர், திருவள்ளூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 6000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகள் கட்டப்படும். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த புதிய திட்டங்களை தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.ஆர். பெரியகருப்பன், அர.சக்கரபாணி, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பொதுவினியோகத் திட்டத்திற்காக உணவுத் தானிய சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2021 முதல் இதுவரை ரூ.155.28 கோடி செலவில் 84,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்குகள், ரூ.39.37 கோடி செலவில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், ரூ.236.09 கோடி செலவில் 2,82,750 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.26.97 கோடி செலவில் 6 வட்ட செயல்முறை கிடங்குகள், ரூ.6.87 கோடி செலவில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், ரூ.58.61 கோடி செலவில் 4 மேற்கூரை அமைப்புள்ள நவீன நெல் சேமிப்பு தளங்கள் என மொத்தம் ரூ.92.45 கோடி மதிப்பீட்டில் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.