சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனாவின் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவை கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றின் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் இயல்புநிலை திரும்பிய பின்னரும் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.ஆனால் சென்னை ஹாங்காங் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 2ஆம் தேதி முதல் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் சென்னை- ஹாங்காங் இடையே விமான சேவையை தொடங்குவதாகஅறிவித்துள்ளது. மேலும் இந்த விமானம் 3 நாட்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை - மொரிஷியஸ் இடையே ஏர் மொரிஷியஸ் ஏர்லைன்ஸ் விமான சேவை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.