நடப்பு 2025 ஆம் நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்ட மொத்த நேரடி வரி 5.75 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்ட தனிநபர் வருமான வரி 3.6 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. மேலும், கார்ப்பரேட் வரி வசூல் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தனிநபர் வருமான வரி வசூல் 24% மற்றும் கார்ப்பரேட் வரி வசூல் 12.5% உயர்ந்துள்ளது. மேலும், திருப்பிச் செலுத்தப்பட்ட வரி 70902 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 64.5% உயர்வாகும். நேரடி வரி வசூல் அதிகமாக உள்ளதால், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை பெருமளவு குறையும் என கருதப்படுகிறது.