காசாவில் பேரழிவு: நிவாரண பெற முற்பட்டவர்களில் 25 பேர் உயிரிழப்பு

June 10, 2025

இஸ்ரேல்–ஹமாஸ் போர் காரணமாக, காசா பகுதியில் ஏராளமானோர் உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. நிவாரண பொருட்கள் பெறச் சென்ற பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலியாகினர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் காரணமாக காசா பகுதியில் 54,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியங்கள் தட்டுப்பாடாக உள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அனுப்பிய நிவாரண பொருட்கள் அமெரிக்க தொண்டு நிறுவனமொன்றால் விநியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், ரபா பகுதியில் நிவாரண […]

இஸ்ரேல்–ஹமாஸ் போர் காரணமாக, காசா பகுதியில் ஏராளமானோர் உயிரிழப்பும் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. நிவாரண பொருட்கள் பெறச் சென்ற பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலியாகினர்.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் காரணமாக காசா பகுதியில் 54,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியங்கள் தட்டுப்பாடாக உள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அனுப்பிய நிவாரண பொருட்கள் அமெரிக்க தொண்டு நிறுவனமொன்றால் விநியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், ரபா பகுதியில் நிவாரண பொருட்கள் பெற கூட்டமாக வந்திருந்த பொதுமக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்து 25 பேர் உயிரிழந்தனர், மேலும் 70 பேர் காயமடைந்தனர். சந்தேகத்துக்குரிய நபர்கள் இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலுக்கான காரணம் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தகராறு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu