நீலகிரியில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து அங்கு பேரிடர் மீட்பு படை முகாமிட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் நேற்று முழுவதும் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் மட்டும் 34 சென்டிமீட்டர் மழை வரை பதிவாகியுள்ளது. அதேபோன்று ஒரே நாளில் ஐந்து இடங்களில் 10 செ.மீ வரை மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் அங்கு நீலகிரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். அதன்படி உதகை, மஞ்சூர், தேவாலா, கடலூர் ஆகிய நான்கு இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் குழுவினர் முகாமிட்டுள்ளனர். அதில் ஒவ்வொரு குழுவிலும் தலா 10 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.