தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. அதில் நெல்லை, குமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு குழுவிற்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் பத்து குழுக்கள் அமைக்கப்பட்டு, 300 வீரர்கள் நான்கு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். அதன்படி நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட மூன்று குழுக்களும், குமரியில் 90 வீரர்கள் கொண்ட மூன்று குழுக்களும், நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட மூன்று குழுக்களும், கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்