தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உக்ரைன் போர் - பியர் கிரில்ஸ் மற்றும் ஜெலன்ஸ்கி சந்திப்பில் முடிவு

December 2, 2022

பிரிட்டனின் டிஸ்கவரி சேனல் நெறியாளர் பியர் கிரில்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அண்மையில் நேரில் சந்தித்து பேசினார். உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்ப, அப்போது விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார். அதில், உக்ரைனில் போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளி உலகத்திற்கு இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்கு உலக மக்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பியர் கிரில்ஸ், தனது […]

பிரிட்டனின் டிஸ்கவரி சேனல் நெறியாளர் பியர் கிரில்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அண்மையில் நேரில் சந்தித்து பேசினார். உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்ப, அப்போது விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார். அதில், உக்ரைனில் போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளி உலகத்திற்கு இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்கு உலக மக்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பியர் கிரில்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கட்டான சூழலிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கிய உக்ரைன் அதிபருக்கு நன்றி. கடும் குளிரினால் தவிர்த்து வரும் உக்ரைன் நாட்டில், அடிப்படை கட்டமைப்புகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கைக்காக தினம் தினம் போராடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மூலம், உக்ரைன் அதிபர் எவ்வாறு போரை எதிர்கொள்கிறார் என்று வெளி உலகத்திற்கு காட்டப்படும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu