சென்னையில் பூனைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் நோய் பரவி வருகிறது.
சென்னையில் பெலன் பார்வோ வைரஸ் எனப்படும் புதிய வகை வைரஸ் பூனைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது சிறிய பூனைகள் மட்டுமின்றி அனைத்து வயது பூனைகளையும் எளிதாக தாக்குகிறது. இதனால் காய்ச்சல், ஆழ்ந்த மனசோர்வு மற்றும் பசியின்மை ஆகிய அறிகுறிகள் பூனைகளுக்கு ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சில பூனைகளுக்கு ரத்தக் கசிவுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது, இந்த வைரஸ்கள் பூனைகளை தாக்கும் தொற்று வைரஸ் ஆகும். சென்னையில் தற்போது அதிகரித்து வருகிறது இதற்கான அறிகுறி சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. 60% பூனைகள் மட்டுமே சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைக்கின்றன. தடுப்பூசி போட்டால் மட்டுமே காப்பாற்ற முடியும். இந்த வைரஸ் எப்போதும் இருக்கும் ஆனால் குளிர்காலம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் போது இவை அதிகமாக பரவும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட தொற்றுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தொற்று நோய்களும் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.