தோல் கழலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

December 17, 2022

கறவை மாடுகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரியில் கால்நடை நலக்கல்வி மையம் சார்பில் 'கறவை மாடுகளில் தோல் கழலை நோய் தாக்கம் மற்றும் கட்டுப்பாடு' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. அப்போது மாடுகளின் தோல் கழலை நோய் குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் பேசுகையில், அதிகரித்து வரும் நோய்களால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பொருளாதார இழப்பு […]

கறவை மாடுகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரியில் கால்நடை நலக்கல்வி மையம் சார்பில் 'கறவை மாடுகளில் தோல் கழலை நோய் தாக்கம் மற்றும் கட்டுப்பாடு' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. அப்போது மாடுகளின் தோல் கழலை நோய் குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் பேசுகையில், அதிகரித்து வரும் நோய்களால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இவற்றைத் தடுக்க பல்வேறு ஆய்வுகளுக்கு பின் 'தோல் கழலை' நோய்க்கு பல்கலை ஆராய்ச்சி மையத்தில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன என்று கூறினார். பின்னர் பல்கலை பதிவாளர் டென்சிங் ஞானராஜ் பேசுகையில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பொறுப்புகள் அதிகரித்துள்ளன என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu