புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - ஐ .நா எச்சரிக்கை

August 19, 2023

புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு பிஏ 2.86 என பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸின் பரவல் மற்றும் வீரியம் குறித்து கண்காணிப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் குறித்து மேலும் பல தகவல்களை சேகரித்து வருவதாகவும் அது விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு […]

புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு பிஏ 2.86 என பெயரிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸின் பரவல் மற்றும் வீரியம் குறித்து கண்காணிப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் குறித்து மேலும் பல தகவல்களை சேகரித்து வருவதாகவும் அது விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்திருக்கிறது.

நேற்று குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஜி-20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பெட்ரூஸ் கேப்ரேசஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது கொரோனா தொற்று உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை, இருப்பினும் அச்சுறுத்தல் நீடிக்கிறது என்றார். கொரோனாவின் மாறுபாடு வைரஸ் பிஏ 2.86 தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது

அனைத்து உலக நாடுகளுக்கிடையே தொற்றுநோய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதற்கான செயல்முறை இப்போது வகுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சுகாதார சபையில் அது ஏற்றுக் கொள்ளப்படும். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா உள்பட ஜி20 நாடுகளின்
சுகாதார மந்திரிகள் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu