டிஸ்னி நிறுவனம் தனது மூன்றாம் சுற்று பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த முறை கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என செய்தி வெளிவந்துள்ளது. இது, ஏற்கனவே டிஸ்னி தலைமை செயல் அதிகாரி பாப் இகர் அறிவித்திருந்த பணிநீக்க நடவடிக்கையின் பகுதியாகும்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், டிஸ்னி நிறுவனத்தின் இரண்டாம் சுற்று பணி நீக்க நடவடிக்கையில் 4000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையால் 5.5 பில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.