டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாதாரர் எண்ணிக்கை 6% சரிவு

February 10, 2023

டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாதாரர் எண்ணிக்கையில் காலாண்டு அடிப்படையில் 6% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், ஜியோ உடனான தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்காததன் காரணமாகவும், ஐபிஎல் டிஜிட்டல் உரிமம் தொடர்பாக ஏற்பட்ட வெற்றிடம் காரணமாகவும், சந்தாதாரர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடர் காரணமாகவே, ஹாட்ஸ்டார் சந்தாதாரர் எண்ணிக்கையில் அதிகம் முன்னேற்றம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. வால்ட் டிஸ்னி, அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டு முறையை பின்பற்றுகிறது. எனவே, தற்போது நிறுவனம் வெளியிட்ட முதலாம் காலாண்டு […]

டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாதாரர் எண்ணிக்கையில் காலாண்டு அடிப்படையில் 6% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், ஜியோ உடனான தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்காததன் காரணமாகவும், ஐபிஎல் டிஜிட்டல் உரிமம் தொடர்பாக ஏற்பட்ட வெற்றிடம் காரணமாகவும், சந்தாதாரர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடர் காரணமாகவே, ஹாட்ஸ்டார் சந்தாதாரர் எண்ணிக்கையில் அதிகம் முன்னேற்றம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வால்ட் டிஸ்னி, அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டு முறையை பின்பற்றுகிறது. எனவே, தற்போது நிறுவனம் வெளியிட்ட முதலாம் காலாண்டு அறிக்கைப்படி, 2022 ஆம் ஆண்டு, டிஸ்னி ஹாட்ஸ்டாரின் சந்தாதாரர் எண்ணிக்கை 61.3 மில்லியனிலிருந்து 57.5 மில்லியனாக சரிந்துள்ளது. மேலும், சந்தா கட்டணம் மூலமாக ஈட்டப்படும் சராசரி மாதாந்திர வருவாய் 28% உயர்ந்து, 0.74 டாலர்களாக உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில், காலாண்டு முறையிலான சந்தா முறையை ஹாட்ஸ்டார் அறிமுகம் செய்ததன் விளைவாக, சந்தாதாரர் எண்ணிக்கையில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu