ஏப்ரலில், டிஸ்னி நிறுவனத்தில் 4000 பேர் பணிநீக்கம்

March 21, 2023

டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர், நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையாக 7000 எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்யப்படலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், இதன் மூலம், கிட்டத்தட்ட 5.5 பில்லியன் டாலர்கள் அளவில் செலவுகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது, வரும் ஏப்ரல் மாதத்தில் 4000 பேர் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 7000 பணியாளர்களில், 4000 பேர் மேலாளர்களால் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படுவர் என கருதப்படுகிறது. மேலும், 3000 பேரின் பணி […]

டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர், நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையாக 7000 எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்யப்படலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், இதன் மூலம், கிட்டத்தட்ட 5.5 பில்லியன் டாலர்கள் அளவில் செலவுகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது, வரும் ஏப்ரல் மாதத்தில் 4000 பேர் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 7000 பணியாளர்களில், 4000 பேர் மேலாளர்களால் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படுவர் என கருதப்படுகிறது. மேலும், 3000 பேரின் பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. டிஸ்னி நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், 7000 என்பது கிட்டத்தட்ட 3.6% ஆகும். எனவே, இந்த பணி நீக்க நடவடிக்கை மூலம், நிறுவனத்தை லாபகரமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu