அரசு கேபிள் டிவி சேவையில் தடங்கல் : மென்பொருள் நிறுவனம் மீது நடவடிக்கை

November 21, 2022

அரசு கேபிள் டிவி சேவை தடங்கலுக்குக் காரணமான மென்பொருள் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் கடந்த நவ.19-ம் தேதி முதல் திடீரென தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை பல பகுதிகளில் […]

அரசு கேபிள் டிவி சேவை தடங்கலுக்குக் காரணமான மென்பொருள் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் கடந்த நவ.19-ம் தேதி முதல் திடீரென தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை பல பகுதிகளில் உள்ள செட்-டாப் பாக்ஸ்களில் தடைபட்டது.

பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தொழில்நுட்பக் குழு செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும். மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu