புதுச்சேரியில் செயல்படாத 1,256 சங்கங்கள் கலைப்பு: பதிவாளர் உத்தரவு

September 19, 2022

புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு, செயல்படாமல் பெயரளவில் உள்ள 1,256 சங்கங்களை கலைக்க, சங்கங்களின் பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரியில் கல்வி, கலை, இலக்கியம், பொது நலன் மேம்பாடு என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும். மாநிலம் முழுதும் 25 ஆயிரம் சங்கங்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள் முறையாக செயல்படாமல் […]

புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு, செயல்படாமல் பெயரளவில் உள்ள 1,256 சங்கங்களை கலைக்க, சங்கங்களின் பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் கல்வி, கலை, இலக்கியம், பொது நலன் மேம்பாடு என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும். மாநிலம் முழுதும் 25 ஆயிரம் சங்கங்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள் முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக இந்திய கம்பெனி விவகாரத் துறைக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள மாவட்ட சங்கங்களின் பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார். அதில், கடந்த 1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை பல சங்கங்கள் செயல்படாமல் இருப்பது உறுதியானது. அவற்றில் மாநிலம் முழுவதும் 1,256 செயல்படாத சங்கங்கள் அடையாளம் காணப்பட்டது. இந்த சங்கங்களை கலைக்க சங்கங்களின் பதிவாளர் கோகுல்நாத் உத்தரவிட்டார்.

சங்க விதிமுறைகளின்படி ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த சங்கங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த சங்கங்களின் பெயர்கள் பதிவுத்துறை கோப்புகளில் இருந்து விரைவில் நீக்கப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu