நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி விநியோகம் நாளை தொடக்கம்

December 28, 2023

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தென் மாவட்டங்கள் ஆன தூத்துக்குடி,நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை கடந்த 21ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட […]

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தென் மாவட்டங்கள் ஆன தூத்துக்குடி,நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை கடந்த 21ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ரூபாய் 6000 வழங்கப்படும் எனவும் லேசான பாதிப்பு உள்ள வட்டங்களுக்கும் மற்றும் குமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு காரணமாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இதற்காக டோக்கன்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் விநியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை முதல் ரேஷன் கடைகளில் ரொக்கமாக நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu