ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் விநியோகம் 

February 22, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பரிசுப் பொருள், பணம் வழங்கும் நடவடிக்கையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெட்டுக்காட்டு வலசு பகுதியில், நேற்று முன்தினம் வீடு வீடாக குக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. குக்கர் பெற்றுக் கொண்ட பெண்களிடம், கை சின்னத்துக்கு வாக்களிக்ககோரும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு […]

ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பரவலாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பரிசுப் பொருள், பணம் வழங்கும் நடவடிக்கையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெட்டுக்காட்டு வலசு பகுதியில், நேற்று முன்தினம் வீடு வீடாக குக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. குக்கர் பெற்றுக் கொண்ட பெண்களிடம், கை சின்னத்துக்கு வாக்களிக்ககோரும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில், எவர்சில்வர் குடங்கள், வேட்டி, சேலையும் வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகாரை அடுத்து, 4 பறக்கும் படைகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தின. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் விநியோகம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக புகார் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu