குஜராத்தில் பௌத்தம், சீக்கியம் மற்றும் சமணம் ஆகியவை தனி மதங்கள் என்றும் இந்துவாக இருந்து இந்து மதங்களுக்கு மாற விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பாஜக கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பௌத்தம், சீக்கியம் மற்றும் சமணம் ஆகியவை தனி மதங்கள் என்றும் இந்துவாக இருந்து இந்து மதங்களுக்கு மாற விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து குஜராத் உள்துறை அமைச்சகம் சார்பில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறுவது தொடர்பான விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்படுவது இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குஜராத் மத சட்ட சுதந்திரத்தின் படி இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம்,சீக்கியமாகிய மதங்களுக்கு மாறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.