தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு கடைகள்: ஏலம் அறிவிப்பு

October 24, 2024

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் நாளை நடைபெற உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.இதில், 1 முதல் 8 வரை உள்ள கடைகள் ரூ.2.25 லட்சம், 9 முதல் 24 வரை உள்ள கடைகள் ரூ.4 லட்சம், 26 முதல் 38 வரை உள்ள கடைகள் ரூ.5.60 லட்சம், மற்றும் 42 […]

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் நாளை நடைபெற உள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.இதில், 1 முதல் 8 வரை உள்ள கடைகள் ரூ.2.25 லட்சம், 9 முதல் 24 வரை உள்ள கடைகள் ரூ.4 லட்சம், 26 முதல் 38 வரை உள்ள கடைகள் ரூ.5.60 லட்சம், மற்றும் 42 முதல் 50 வரை உள்ள கடைகள் ரூ.3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இந்த தொகைக்கு பட்டாசு கடைகள் ஒதுக்கப்பட்டு, நாளை முதல் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் அருகே உள்ள காமதேனு கூட்டுறவுச் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu