ஆந்திர அரசு நவம்பர் 13ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை விடுமுறையை நவம்பர் 13-ஆம் தேதியாக மாற்றி ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக வெளியிட்ட உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறை பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தீபாவளி பண்டிகையின் மறுநாள் ஆன 13.11.2023 அன்று பொது விடுமுறையாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.