தீபாவளி சிறப்பு ரயில் சேவைகள்

October 19, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 40ககும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா ஆகிய இடங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக, முக்கிய ரயில்களில் காத்திருப்போர் பட்டியல்கள் அதிகமாக உள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து வரும் 29 மற்றும் 30-ந்தேதிகளில் புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 40ககும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா ஆகிய இடங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக, முக்கிய ரயில்களில் காத்திருப்போர் பட்டியல்கள் அதிகமாக உள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து வரும் 29 மற்றும் 30-ந்தேதிகளில் புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்துள்ளது, இதனால் 7000க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். பயணிகளுக்கு வசதியாக, 25-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும், சாத் பண்டிகையை முன்னிட்டு, 23-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு வாரம் இரு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu