தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட வெளிநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், இதற்காக சிறப்பு ரெயில்களும், கூடுதல் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்று (ஆகஸ்ட் 17) காலை 8 மணிக்கு அக்டோபர் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்துக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் மற்றும் முன்பதிவு மையங்களில் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து, உடனடியாக காத்திருப்பு பட்டியல் காட்டப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கான அதிகமான கோரிக்கை காரணமாக, ரெயில் டிக்கெட்டுகள் மிகக் குறைந்த நேரத்தில் முழுவதுமாக தீர்ந்து போனது.