மின்சார திருத்த சட்ட மசோதாவில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக இருக்கும் 12 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக எம்பியும், எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர், மின்சார திருத்த சட்ட மசோதாவால், எதிர்காலத்தில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர வேண்டும்.
மேலும் இந்த சட்டத்திருத்த மசோதாவில் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக இருக்கும் 12 சட்ட பிரிவுகளை ஒன்றிய அரசு கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும். இந்த மசோதாவை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநிலத்தை சேர்ந்த மின் துறையின் மேலாண்மை ஆணையர்களை நேரில் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.














