கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் டிசம்பர் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி திமுக பொது செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இதில் வாக்குச்சாவடி உறுப்பினர்கள், மகளிர் இளைஞரணி வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பது குறித்தும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளபடும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.














