அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 8000 கோடி ரூபாய் தொகையை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக டெல்லி மெட்ரோ மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு தீர்ப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வெளியானது. அதன்படி, குறிப்பிட்ட தொகை டெல்லி மெட்ரோ சார்பில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2022 டிசம்பரில், நிலுவைத் தொகையை செலுத்த கோரி ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி மெட்ரோ 8000 கோடி ரூபாய் செலுத்த வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள்ளது. மேலும், டெல்லி மெட்ரோ ஏற்கனவே செலுத்திய தொகையை உடனடியாக திருப்பி செலுத்துமாறு ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.