எச் 1 பி விசாக்களை புதுப்பிப்பதற்கு சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டே விசாக்களை புதுப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
விசா நடைமுறைகளை எளிமையாக்கும் வகையில், அமெரிக்கா புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வரும் டிசம்பர் முதல், 3 மாதங்களுக்கு இந்த புதிய நடைமுறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, எச் 1 பி விசாக்களை புதுப்பிக்க சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டே புதுப்பித்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக, 20,000 எச் 1 பி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு புதுப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.














