இந்தியாவின் 14 நகரங்களில் 20 நிமிட டெலிவரி திட்டம் - டோமினோஸ் அறிவிப்பு

December 21, 2022

இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா நிறுவனமான டோமினோஸ், 20 நிமிடங்களில் பீட்சா டெலிவரி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் 20 மண்டலங்களைச் சேர்ந்த 14 முக்கிய நகரங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், குறைந்த நேரத்தில், நிறுவனத்தின் தரமான பீட்சா தயாரிப்புகள், வாடிக்கையாளரை பாதுகாப்பாக சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோமினோஸ் நிறுவனம், ஏற்கனவே, இந்தியாவில் 30 நிமிட டெலிவரியை அறிமுகப்படுத்தி சாத்தியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் அறிமுகம் குறித்து பேசிய டோமினோஸ் நிறுவனத்தின் இந்தியப் […]

இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா நிறுவனமான டோமினோஸ், 20 நிமிடங்களில் பீட்சா டெலிவரி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் 20 மண்டலங்களைச் சேர்ந்த 14 முக்கிய நகரங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், குறைந்த நேரத்தில், நிறுவனத்தின் தரமான பீட்சா தயாரிப்புகள், வாடிக்கையாளரை பாதுகாப்பாக சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோமினோஸ் நிறுவனம், ஏற்கனவே, இந்தியாவில் 30 நிமிட டெலிவரியை அறிமுகப்படுத்தி சாத்தியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் அறிமுகம் குறித்து பேசிய டோமினோஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமை நிர்வாகி ரசல் வீனர், “அமெரிக்காவுக்கு பின்னர், டோமினோஸ் பீட்சாவின் முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை முன்னிறுத்தி செயல்படும் எங்கள் நிறுவனம், 20 நிமிட டெலிவரி திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இது மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu