அமெரிக்கா: முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு - சரணடைய வாய்ப்பு

March 31, 2023

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மேன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. எனவே, டிரம்ப் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர், கிரிமினல் வழக்கில் கைது செய்யப்படும் சூழல் உருவாவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், கைது நடவடிக்கையை தவிர்க்க, டிரம்ப் அடுத்த வாரம் சரண் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்க நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் க்கு, 130000 டாலர் தொகையை 2016 தேர்தல் பிரச்சார […]

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மேன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. எனவே, டிரம்ப் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர், கிரிமினல் வழக்கில் கைது செய்யப்படும் சூழல் உருவாவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், கைது நடவடிக்கையை தவிர்க்க, டிரம்ப் அடுத்த வாரம் சரண் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்க நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் க்கு, 130000 டாலர் தொகையை 2016 தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து கொடுத்ததாக, டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் ஹோகன், ட்ரம்புக்கு எதிராக சாட்சி அளித்து நடிகைக்கு பணம் வழங்கியதற்கான ஆதாரத்தை உறுதி செய்தார். எனவே, இந்த கிரிமினல் குற்றத்திற்காக அவர் கைது செய்யப்படலாம். முன்னதாக, சில தினங்களுக்கு முன், டிரம்ப் கைதானால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்த செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu