அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கையுடன் தெரிவித்தார். இந்நிலையில், டிரம்ப் தனது Truth வலைதளத்தில், “அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை மாற்றி, வேயின் கிரேட்ஸ்கியை பிரதமராக்குவேன். இதனால் வரி குறையும். ” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். 2025 அக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2015-ம் […]

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கையுடன் தெரிவித்தார். இந்நிலையில், டிரம்ப் தனது Truth வலைதளத்தில், “அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை மாற்றி, வேயின் கிரேட்ஸ்கியை பிரதமராக்குவேன். இதனால் வரி குறையும். ” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

2025 அக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2015-ம் ஆண்டு முதல் கனடா பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ மீது, பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், "நான் தலைசிறந்த ஐஸ் ஹாக்கி வீரரான வெய்னிடம் கனடாவின் பிரதமர் பதவிக்கு நீங்கள் ஏன் போட்டியிடக்கூடாது, விரைவில் கனடாவின் ஆளுநர் என்று அறியப்படுவீர்கள்- நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள், நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூட வேண்டியதில்லை என்றேன்” என்ற டிரம்பின் பகடி உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu